சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான முகாம்

கோவை குனியமுத்தூரில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.


Coimbatore: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

குனியமுத்தூர் கிளை தலைவர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த முகாம், சாய்கார்டன் அனெக்ஸ் பகுதியில் உள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



குனியமுத்தூர் கிளை செயலாளர் நாசர், பொருளாளர் யூசுஃப், இப்ராஹிம், மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இரத்த தான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.



மாவட்ட அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் தானமாக வழங்கப்பட்ட இரத்தங்களை சேகரித்தனர். இந்த முயற்சி மூலம், தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் கணிசமான அளவு இரத்தம் சேகரிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...