உடுமலையில் அறிவு சார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு யூ.கே.சி. நகர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.191 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் மத்தின், முன்னாள் நகர மன்ற தலைவரும் 33-வது வார்டு உறுப்பினருமான வேலுச்சாமி, நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



நகராட்சி நிர்வாகம் சார்பில், இந்த அறிவு சார் மையத்தில் தினமும் பல்வேறு முக்கிய நாளிதழ்கள், குழந்தைகள் படிப்பதற்கான புத்தகங்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் உள்ளதாகவும், அனைவரும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவு சார் மையம் திறக்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் இன்று அங்குள்ள புத்தகங்களைப் படித்து பயன்பெற்றனர். இந்த மையம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவு மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...