பொள்ளாச்சியில் ரூ.43 லட்சத்தில் கட்டப்பட்ட பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

பொள்ளாச்சி நகராட்சியின் 24வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ரூ.43 லட்சம் மதிப்பிலான பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.



கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு சோமசுந்தரம் லேஅவுட் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் செலவில் புதிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



பூங்கா திறப்பு விழாவைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் கணேசன் ஆகியோர் பூங்காவைப் பார்வையிட்டனர். அவர்கள் அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் 24வது வார்டு உறுப்பினர் தங்கவேல், மற்ற நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...