உடுமலை வனச்சரக அலுவலகத்தில் இரு வனச்சரகர்கள்: விவசாயிகள் குழப்பம்

உடுமலை வனச்சரக அலுவலகத்தில் இரண்டு வனச்சரகர்கள் பணியாற்றுவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு யாரிடம் புகார் அளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் உடுமலை வனச்சரகம் அமைந்துள்ளது. இங்கு தற்போது இரண்டு வனச்சரக அலுவலர்கள் பணியாற்றி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.



உடுமலை வனச்சரக அலுவலராக பணியாற்றி வந்த சிவக்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.



அவருக்குப் பதிலாக மணிகண்டன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால், சிவக்குமார் தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் சிவக்குமாரின் பணியை தொடர அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தற்போது உடுமலை வனச்சரக அலுவலகத்தில் சிவக்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் வனச்சரக அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் தனித்தனியாக மேசை நாற்காலி அமைத்து பணிபுரிவதால், பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.



வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு யாரிடம் புகார் தெரிவிப்பது, எவ்வாறு நிவாரணம் பெறுவது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், ஒரே பணிக்கு இரண்டு நபர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், வனத்துறை உயர் அதிகாரிகள் உடுமலை வனச்சரக அலுவலராக சிவக்குமாரா அல்லது மணிகண்டனா என்பதை முறையாக பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...