பொள்ளாச்சி மரப்பேட்டையில் வசிக்கும் குடும்பங்கள் வீட்டுப் பட்டா கோரி சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி மரப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா கோரி சார் ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர். தனிநபர் ஒருவர் வீடுகளை காலி செய்ய வற்புறுத்துவதாக குற்றம்சாட்டினர்.



கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மரப்பேட்டை வீதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை தங்கள் பெயரிலேயே செலுத்தி வருகின்றனர்.



நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வரும் இந்த குடும்பங்கள், தற்போது ஒரு தனிநபர் தனது சொந்த இடம் என கூறி வீடுகளை காலி செய்ய வற்புறுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுவில், காலங்காலமாக அப்பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்கி, தனிநபரின் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...