கோவை கல்லூரிகள் தேசிய தரவரிசையில் சிறப்பிடம்: பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணாம்மாள் கல்லூரி 7வது இடம்

மத்திய அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான கல்லூரிகளின் தேசிய தரவரிசையில் கோவை கல்லூரிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன. கலை மற்றும் பொறியியல் பிரிவுகளில் கோவையின் பல்வேறு கல்லூரிகள் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளன.


கோவை: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளை மதிப்பீடு செய்து தரவரிசை வெளியிடுகிறது. இந்த ஆண்டின் சிறந்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

கலைப் பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 9 கல்லூரிகளும், பொறியியல் பிரிவில் 3 கல்லூரிகளும் முதல் 100 இடங்களைப் பிடித்துள்ளன.



கலைப் பிரிவில் தேசிய அளவில் 7வது இடத்தையும், கோவையில் முதல் இடத்தையும் PSGR கிருஷ்ணாம்மாள் கலை கல்லூரி பெற்றுள்ளது.



அதைத் தொடர்ந்து தேசிய அளவில் 11ஆம் இடத்திலும், கோவையில் 2ஆம் இடத்திலும் PSG கலை அறிவியல் கல்லூரி உள்ளது.



தேசிய அளவில் 37வது இடத்திலும், கோவையில் 3ஆம் இடத்திலும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இடம்பெற்றுள்ளது.



பொறியியல் பிரிவில், தேசிய அளவில் 23ஆம் இடத்திலும், கோவையில் முதல் இடத்திலும் அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் உள்ளது.



தேசிய அளவில் 67ஆம் இடத்திலும், கோவையில் 2ஆம் இடத்திலும் PSG தொழில்நுட்பக் கல்லூரி இடம்பெற்றுள்ளது.



அதைத் தொடர்ந்து தேசிய அளவில் 83ஆம் இடத்திலும், கோவையில் 3ஆம் இடத்திலும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.

இந்தத் தரவரிசை, கோவை மாவட்டத்தின் கல்வித் தரத்தை எடுத்துக்காட்டுவதோடு, இங்குள்ள கல்லூரிகளின் சிறந்த செயல்பாட்டையும் பறைசாற்றுகிறது. இது மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தேர்ந்தெடுக்க உதவுவதோடு, கல்லூரிகளுக்கும் மேலும் முன்னேற ஊக்கமளிக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...