கோவை துடியலூரில் மாணவர்கள் உருவாக்கிய பிரம்மாண்ட நீர்த்துளி உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது

கோவை துடியலூரில் நீர் சேமிப்பு விழிப்புணர்வுக்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர்த்துளி வடிவம் உருவாக்கினர். இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.



கோவை: கோவை துடியலூரில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர் துளி போல கூடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

கோவை துடியலூர் பகுதியில் ராசிகா ஈவென்ட்ஸ் சார்பில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காணொளி காட்சி வழியாக பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச் செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தண்ணீர் சேமிப்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து உலக சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார். வி.கே.வி குரூப் ஆப் கம்பெனியின் தலைவர் வி.கே.வி சுந்தரராஜன் தலைமை வகித்தார். கண்ணன் பந்தல் நிலையம் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து 3 வயது முதல் 16 வயது வரையிலான ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரம்மாண்ட நீர் துளி போல் கூடி தண்ணீரின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது குழந்தைகளிடமிருந்து பெற்றோர்களுக்கும், பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கும் தண்ணீரை சேமிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேரில் அங்கீகரித்துள்ள நோபல் உலக சாதனை அமைப்பு தனது 2025 ஆம் ஆண்டுக்கான சாதனை புத்தகத்தில் இடம் அளித்து உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனை புத்தக அமைப்பின் சார்பில் அதற்கான சான்றிதழை ராசிகா ஈவென்ட்ஸ் உரிமையாளர் ராசிகாவிடம் அந்த அமைப்பினர் வழங்கினர்.

இந்த பிரம்மாண்ட நீர்த்துளி போல் கூடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கும் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழ்களை அந்த அமைப்பு வழங்கியது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தண்ணீரின் சேமிப்பு குறித்து உணர்த்தும் வகையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வி.ஜி.மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...