தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல் குறித்த மாணவர் கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 12 மற்றும் 13, 2024 அன்று "வேளாண் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல்" குறித்த 9வது வேளாண் ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. 1254 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் காலநிலை மாற்றம், வேளாண் வணிகமயமாக்கல் போன்ற முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகத்தில் ஆகஸ்ட் 12 மற்றும் 13, 2024 ஆகிய நாட்களில் "9வது வேளாண் ஆராய்ச்சி மாணவர்கள் கருத்தரங்கம் (AGSC)" நடைபெற்றது.



"வேளாண் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் முனைவர் தே.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் முனைவர் ந.செந்தில் கருத்தரங்கின் முக்கியத்துவத்தையும், எதிர்கால வேளாண்மைக்கான தீர்வுகளையும் விளக்கினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினரான வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இயற்கை வள மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் ஆலோசகர் முனைவர் S.பாஸ்கர், வேளாண்மையில் காலநிலை மாற்றங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு, பாலைவனமயமாக்கல், கரியமில வாயுவை குறைத்தல், கரிம வர்த்தகம், சுழற்சி பொருளாதாரம் ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினார்.





வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி தலைமையுரை வழங்கினார். அவர் இந்த நூற்றாண்டுக்கான வேளாண் வணிகமயமாக்கல், இயந்திரமயமாக்கல் மற்றும் தன்னியக்கமாக்கலுக்கான முன்னெடுப்புகள், கருத்தரங்கத்தின் சிறப்புகள், பல்வேறு வேளாண் உட்துறைகளின் முக்கியத்துவம், பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் சாதனைகள் பற்றி விரிவாக பேசினார்.

இந்த நிகழ்வில் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 1254 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். 427 சுவரொட்டி விளக்கக்காட்சிகளும், 66 வாய்வழி விளக்கக்காட்சிகளும் இடம்பெற்றன. கருத்தரங்க சுருக்கத் தொகுப்பு புத்தகத்தின் முதல் நகலை சிறப்பு விருந்தினர் முனைவர் S.பாஸ்கர் வெளியிட்டார். இக்கருத்தரங்கு தேசிய அளவில் எதிர்கால விவசாயத்திற்கு வழிக்காட்டும் முக்கிய முன்னெடுப்பாக அமைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...