கோவையில் நடைபெற்ற ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்திய அணி சாம்பியன்

கோவையில் ஏஜேகே டர்ஃப் டென்5 சார்பில் நடைபெற்ற ஆடவர்களுக்கான திறந்த நிலைப்பிரிவு ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்திய புட்பால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.


கோவை: கோவை பாலக்காடு நெடுஞ்சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே டர்ஃப் டென்5 நவீன கால்பந்து விளையாட்டு மைதானத்தில் ஏஜேகே டர்ஃப் டென்5 சார்பில் ஆடவர்களுக்கான திறந்த நிலைப்பிரிவு ஐவர் கால்பந்து போட்டி 11.8.2024 அன்று நடைப்பெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.



நாக் அவுட் முறையில் பகல் இரவு போட்டிகளாக நடந்த இந்த நிகழ்வில், கால்பந்து வீரர்கள் சாதுர்யமாக பந்தை கடந்து இலக்கை நெருங்கினர். மிகவும் சுவாரஸ்யமாக நடந்த இப்போட்டியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

இந்தப்போட்டிகளில் முதல் இடத்தை அயோத்திய புட்பால் அணி 5 புள்ளிகளுடன் வென்றது. ஒரு புள்ளியுடன் ஃபிரண்ட்ஸ் புட்பால் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. மூன்றாவது இடத்தை 3 புள்ளிகளுடன் ஏஜேகே ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணி வென்றது. நேரு கலை அறிவியல் கல்லூரி அணி 2 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றது.

முதலிடம் வென்ற அயோத்தியா புட்பால் அணிக்கு பரிசுக்கோப்பையும், ரூபாய் 10,000 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் வென்ற ஃபிரண்ட்ஸ் புட்பால் அணிக்கு ரூபாய் 7,000 பரிசுத்தொகையும், பரிசுக்கோப்பையும், மூன்றாம் இடம் வென்ற ஏஜேகே ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணிக்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகையும், பரிசுக்கோப்பையும், நான்காம் இடம் வென்ற நேரு கலை அறிவியல் கல்லூரி அணிக்கு பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.

ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் தினேஷ்குமார் அவர்கள் வழங்கி, வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி வாழ்த்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...