பொள்ளாச்சியில் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை: வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை எதிர்த்து வணிகர் சங்கங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தின. மகாலிங்கபுரம், புதிய திட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டன.



Coimbatore: பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறப்படும் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை எதிர்த்து வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள மகாலிங்கபுரம் மற்றும் புதிய திட்ட சாலை பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதாக கூறி, 2018-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.



இந்த உத்தரவை அடுத்து, கடந்த ஜூலை 11-ஆம் தேதி விதிகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறப்படும் கட்டடங்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து, வணிகர்கள் பெரும் பாதிப்பை சந்திப்பதாகக் கூறி இன்று பொள்ளாச்சி நகரப் பகுதியில் வணிகர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மகாலிங்கபுரம், புதிய திட்ட சாலை, கடைவீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும், வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ராஜேஸ்வரி திடல் பகுதியில் அனைத்து வியாபாரிகள் மற்றும் வணிக சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறு வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். மேலும், சீல் வைக்கும் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பொள்ளாச்சி நகரப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இன்று ஒரு நாள் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...