கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் போஸ்டர்கள்: மீண்டும் மோதல் சூழல்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Coimbatore: கோவை மாநகராட்சி பகுதியில் அரசியல் கட்சிகள் மாறி மாறி பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டியதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டு சிறைக்குச் செல்லும் அளவிற்கு நிலைமை உருவானது.

இதனைத் தடுக்கும் விதமாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேம்பாலச் சுவர்களில் கோவை மாநகரைச் சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள், இயற்கை ஓவியங்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் கொண்டு வரையச் செய்தது. மேலும், விடுதலைப் போராட்ட தியாகிகளின் உருவப்படங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் அரசியல் கட்சியினர் இடையே சமரசமான சூழ்நிலை உருவானது.



ஆனால், தற்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு மீண்டும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மோதல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...