உடுமலையில் விவசாயிகளை அவதூறாக பேசியவர்களை கைது செய்யக் கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடியில் விவசாயிகளை மாபியா கும்பல், கனிம வள கொள்ளையர்கள் என கூறிய நபர்களை கைது செய்யக்கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வண்டல் மண் எடுப்பதை தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி ஊராட்சி பகுதியில் விவசாயிகளை மாபியா கும்பல், கனிம வள கொள்ளையர்கள் என கூறிய நபர்களை கைது செய்யக்கோரி 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சில தினங்களுக்கு முன் வாளவாடி ஊராட்சியில் உள்ள சப்பட்டியார் குளத்தில் விவசாயிகள் முறையான அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வண்டல் மண் முறையான அனுமதி இல்லாமல் எடுக்கப்படுவதாக காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தினர்.



பின்னர், விவசாயிகளை மாபியா கும்பல் மற்றும் கனிம வள கொள்ளையர்கள் என்று கூறி, பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும், வண்டல் மண் எடுக்கும் பணியை தடுத்து நிறுத்திய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தளி காவல் நிலையத்தில் விவசாயிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகளை தரக்குறைவாக பேசியதற்கும், மாபியா கும்பல், கனிம வளக் கொள்ளையர்கள் என கூறியதற்கும், வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாளவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளை தரக்குறைவாக பேசிய நபர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இருந்தும் மூன்று நாட்கள் வண்டல் மண் எடுக்க முடியாத காரணத்தால், வண்டல் மண் எடுக்க கூடுதல் நாட்கள் அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

உடுமலை அருகே வாளவாடியில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...