திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் நடத்திய கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் குமரன் நினைவகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. இலவச வீட்டு மனை, வேலைவாய்ப்பு முன்னுரிமை, ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் குமரன் நினைவகம் முன்பாக இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களுக்காக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



முக்கிய கோரிக்கைகளில், ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதும், ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் அடங்கும். மேலும், ஆட்டோ ஓட்டுனர் மீது ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படும் வழக்கை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஓய்வூதியத்தை தற்போதைய நிலையில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதேபோல, ஆட்டோ எஃப்சி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...