பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் அவசரமாக வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பூஜை நடந்துகொண்டிருந்தபோது, பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக கோயிலில் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பொள்ளாச்சிக்கு அருகில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். இக்கோயில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் அதிகளவில் வழிபட வருவது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பக்தர்கள் பலரும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.



நேற்று இரவு ஆழியார் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலின் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கோயிலுக்குள் தரிசனம் செய்துகொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தற்போது பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோயிலில் சாமி தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...