தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேசிய நூலகர் தினவிழா கொண்டாட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 12, 2024 அன்று தேசிய நூலகர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூலகத்தில் தேசிய நூலகர் தினவிழா ஆகஸ்ட் 12, 2024 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்திய நூலகத் தந்தை முனைவர் எஸ்.ஆர்.இரங்கநாதனின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது.

மாணவர் நல மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், மாணவர்கள் நூலகம் மற்றும் நூல்களின் சிறப்பை அறிந்து கொள்ளவும், வாசிப்பின் நன்மைகளை உணரவும் வாய்ப்பளிக்கப்பட்டது. மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், நூலக வருகையை அதிகரிக்கவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.



மாணவர் நல மைய முதன்மையர் முனைவர் நா.மரகதம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அவர் தமது உரையில் வாசிப்பின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் ஞானத்தின் பயன்களையும் எடுத்துரைத்தார். கோவை எஸ்.என்.வி குளோபல் பள்ளியின் ஆங்கில ஆசிரியரும் முதல்வருமான முனைவர் சி.சாம்சன், நூலகத்தின் முக்கியத்துவத்தையும் நூலகர்களின் பெருமைகளையும் மாணவர்களுக்கு விளக்கினார்.



மண்ணியல் பேராசிரியரும் நூலகப் பொறுப்பாளருமான முனைவர் கே.எம்.செல்லமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் கே.தங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற நூலகர்களான பேராசிரியர் கே.பாலசுப்ரமணியன், ஆர்.போரையன், முனைவர் கே.பெருமாள்சாமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், நூலகர் (பொறுப்பு) முனைவர் சி.ராணி நன்றியுரை வழங்கினார். இந்த விழா மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நூலகப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...