வேதாத்திரி மகரிஷியின் 114வது பிறந்தநாள்: உலக அமைதி தினமாக கொண்டாட்டம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் அறிவு திருக்கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் 114வது பிறந்தநாள் உலக அமைதி தினமாக கொண்டாடப்பட்டது. தமிழருவி மணியன் சிறப்பு உரையாற்றினார். பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அறிவு திருக்கோயில் மற்றும் உலக சமுதாய சேவா சங்கத்தின் நிறுவனர் வேதாத்திரி மகரிஷியின் 114ஆவது பிறந்தநாள் இன்று உலக அமைதி தினமாக அறிவு திருக்கோயிலில் கொண்டாடப்பட்டது.



ஆழியார் அறிவு திருக்கோயில் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "அமைதிக்கு மனவளக்கலை" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.



தமிழருவி மணியன் தனது உரையில், "வேதாத்திரி மகரிஷி குறித்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகளில் அமைதி நிலவ ஐநா சபையில் அனைத்து நாடுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது வேதாத்திரி மகரிஷியின் விருப்பமாகும். நாட்டில் போர் நடந்தால் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். அதற்காக ஜனநாயக சட்டமன்றம் அமைய வேண்டும். அதில் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், நிபுணர்கள் என அனைவரும் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

விழாவின் ஒரு பகுதியாக, முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் "எளிய முறையில் யோகாசனம் செய்வது எப்படி" என்ற தலைப்பில் குஜராத் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தை வெளியிட்டார்.



இந்த உலக அமைதி தின விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...