கோவையில் குறுகிய தெருக்களில் ரோந்து பணிக்கு 'டிரைக் பைக்' அறிமுகம்: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு

கோவையின் குறுகிய தெருக்களில் ரோந்து பணிக்காக 'டிரைக் பைக்' என்ற புதிய மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இந்த வாகனத்தை ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் சிறிய தெருக்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள கோவை மாநகர காவல்துறையினர் புதுவகை வாகனத்தை அறிமுகம் செய்துள்ளனர். 'டிரைக் பைக்' எனப்படும் இந்த வாகனத்தை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.



இருசக்கர வாகனம் போல் அல்லாமல், ஆட்டோவில் பாடி இல்லாமல் இருப்பது போன்ற தோற்றத்தில் இந்த 'டிரைக் பைக்' உள்ளது. மூன்று சக்கரங்கள் கொண்ட இந்த வாகனத்தை சிறிய தெருக்களில் எளிதாக ஓட்டிச் செல்ல முடியும். மின்சார வாகனமாக உள்ள இதனை பயன்படுத்தி போலீசார் இனி ரோந்து பணி மேற்கொள்வார்கள்.

கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். 1990களில் நூற்பாலைகளும், தறி ஆலைகளும் அதிக அளவில் இயங்கி வந்த கோவை, ஒரு காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் நகரமாக விளங்கியது. இன்று கோவை மாநகரம் மிகப்பெரியதாக வளர்ந்துவிட்டதால், ஏராளமான தொழிற்சாலைகள் நகரத்தை விட்டு வெளியேறி புறநகர் பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. பல புதிய நிறுவனங்களும் புறநகர் பகுதிகளிலேயே செயல்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் கோவை முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளும், தனி வீடுகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. முன்பு தொழிற்சாலைகள் இருந்த இடங்கள் இப்போது வணிக வளாகங்களாக மாறியுள்ளன. பல சிறிய நிறுவனங்கள் இருந்த இடங்கள் முழுமையாக குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் பெற்றுள்ளன.

கோவை மாநகரம் உக்கடம் முதல் நீலாம்பூர் வரை அவினாசி சாலையில் விரிவடைந்துள்ளது. இதேபோல் திருச்சி சாலையில் சூலூர் வரையிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொண்டாமுத்தூர் வரையிலும் நகரம் பரவியுள்ளது. பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி வரையிலும், பாலக்காடு சாலையில் மதுக்கரை வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை வரையிலும், சத்தி சாலையில் கோவில்பாளையம் வரையிலும் கோவை மாநகரம் விரிவடைந்துள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 7,000 தெருக்கள் உள்ளன. இவற்றில் பல தெருக்கள் மிகவும் குறுகலானவையாக உள்ளன. இத்தகைய குறுகிய தெருக்களில் போலீசார் ரோந்துப் பணியை மேற்கொள்ள 'டிரைக் பைக்' என்ற அதிநவீன வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...