கோவை ரேஸ்கோர்ஸில் அறிமுகமான புதிய ரோந்து பைக்: சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் தகவல்

கோவை ரேஸ்கோர்ஸில் புதிய ரோந்து பைக் அறிமுகம் செய்யப்பட்டது. சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரேஸ்கோர்ஸ் பகுதியில் புதிய ரோந்து பைக்கை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், "'Smart Policing for Smart City' என்ற குறிக்கோளுடன் கோவை மாநகர காவல் துறை சரக்கத்திற்கு உட்பட்ட ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் ரோந்து பணியை எளிதாக்குவதற்காக, குமரகுரு இன்ஸ்டிடியூஷன்ஸ் மாணவர்களின் உதவியுடன் இந்த ரோந்து பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது," என்றார்.

காவல் ஆணையர் மேலும் கூறுகையில், "தற்போது இந்த ரோந்து பைக் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாடுகளைப் பொறுத்து கோவை மாநகரில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பகுதிகளான வாலாங்குளம், உக்கடம், ஆர்எஸ் புரம், குறிச்சி உள்ளிட்ட 6 பகுதிகளில் 6 ரோந்து பைக்குகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.



இந்த ரோந்து பைக் Public Address System, Flashlight, GPS உள்ளிட்ட சேவைகளை உள்ளடக்கிய ஸ்மார்ட் வாகனமாக உள்ளது. 50 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், குறிப்பிட்ட நேரம் இல்லாமல் இரவு பகல் என இரண்டு நேரங்களிலும் ரோந்து பணியில் பயன்படுத்தப்படும்.

சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய காவல் ஆணையர், "கோவை மாநகர எல்லையில் உள்ள சோதனை சாவடிகள், வாகனத் தணிக்கை செய்யும் இடங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வ.உ.சி மைதானத்தில் நேற்றிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள். மொத்தம் 2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரை பொறுத்தவரை சுதந்திர தின கொண்டாட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடைபெறும்," என்று உறுதி அளித்தார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...