தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் 2024 நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் 2024 நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் மாணவர் நல மையத்தின் சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாணவர் நல மையத்தின் முதன்மையர் முனைவர். நா. மரகதம் வரவேற்புரை வழங்கினார். அவர் தனது உரையில், பங்கேற்கும் நிறுவனங்களை வரவேற்று, பல்கலைக்கழகத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாராட்டினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் அறிவியல் கல்வியில் முன்னோடியாகவும், தேசிய அளவில் முதலிடத்திலும் இருப்பதை சுட்டிக்காட்டினார். மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் திறன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



பல்கலைக்கழக பதிவாளர் முனைவர். இரா.தமிழ்வேந்தன் துவக்க உரையாற்றினார். வேலைவாய்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்த உதவிய நிறுவனங்களை அவர் பாராட்டினார். மேலும், கலந்துகொண்ட மாணவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் அறிவு மற்றும் திறன்களின் அடிப்படையில் பொருத்தமான வேலைகளைப் பெற ஊக்குவித்தார். இந்த வேலைவாய்ப்பு முகாம் மாணவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சேவைத் துறை, வங்கிகள், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.



மேனாள் பேராசிரியர் முனைவர் ஜ.வெங்கிட் பிரபு, 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு முகாமின் முக்கியத்துவத்தை விளக்கினார். மாணவர்களுக்கு விண்ணப்பம் தயாரித்தல், பொது விவாதம், நேர்காணல் போன்றவற்றிற்கு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உதவி வேலைவாய்ப்பு ஆலோசகர் முனைவர். ச.கவிதா நன்றியுரை வழங்கினார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளில் உதவிய பேராசிரியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முகாமில் பங்கேற்ற நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் நோக்கம், வேலையின் தன்மை, ஊதியம் போன்ற விவரங்களை படத்தொகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...