78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் 110 காலால்படை பட்டாலியன் நடத்திய திரங்கா பைக் பேரணி

கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை 2 இன் சி கமாண்டர் விக்ரம் சிங் துவங்கி வைத்தார்.

பேரணியில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனங்களில் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். இவர்கள் 110 காலால் பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் வளாகத்தில் இருந்து புறப்பட்டு ரெட் பீல்ட்ஸ் சாலை, ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் பேரணியாக சென்றனர்.



பேரணியில் இருசக்கர வாகனங்களுக்கு பின்னால் ராணுவ வாகனம் ஒன்றும் சென்றது. அந்த வாகனத்தில் தேசியக் கொடிகள் ஏந்தப்பட்டிருந்தன. மேலும், ஒலிபெருக்கி மூலம் தேசப்பற்று பாடல்கள் ஒலிக்கப்பட்டன. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.



இந்த திரங்கா பைக் பேரணி மூலம் மக்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதும், 78-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிப்பதும் நோக்கமாக இருந்தது. பேரணியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...