கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றினார். துணைவேந்தர் ப.வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினார். கற்பகம் சேவா விருது வழங்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சிறப்புரையாற்றிய துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பெரியோர்களின் தியாகம் என்றும் போற்றத்தக்கது என்று குறிப்பிட்டார். மேலும், அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணுகின்ற வகையில் நாட்டுப்பற்றும், சமுதாயப் பொறுப்புணர்வும் கொண்டு இளைஞர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



விழாவில் பதிவாளர் முனைவர் சு.இரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பரத்துறை அலுவலர், கோயம்புத்தூர் எஸ்.ஆர்.சந்திரசேகரனுக்கு அவரது சிறந்த சேவைக்காக கற்பகம் சேவா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இவ்விழாவில் கல்லூரியின் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சுதந்திர தின கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...