பொள்ளாச்சியில் 78வது சுதந்திர தின விழா: நகராட்சி தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்

பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் 78வது சுதந்திர தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து, பள்ளி மாணவிகள் கொடி வணக்கம் பாடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.



மேலும், பொள்ளாச்சி நகராட்சியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக பொள்ளாச்சி நகராட்சியில் அதிகாரிகளுக்கு இடையே விரைந்து தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கி டாக்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் கணேசன், துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் வாக்கி டாக்கிகளை வழங்கி புதிய தொடர்பு முறையை தொடங்கி வைத்தனர். இந்த சுதந்திர தின விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...