பொள்ளாச்சியில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் கைது

சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சியில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: பொள்ளாச்சியில் சுதந்திர தினத்தன்று மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் செய்ய முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.



இந்நிலையில், பேரணி நடத்த கொண்டு வந்த டிராக்டர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் திடலில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட விவசாயிகள், "விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்த முயன்ற எங்களை போலீசார் அராஜகத்துடன் நடந்து கொண்டு கைது செய்வது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...