உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம் 78-வது சுதந்திர தின விழாவை நேதாஜி மைதானத்தில் கொண்டாடியது. விழாவில் தேசியக் கொடியேற்றம், அணிவகுப்பு மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா நேதாஜி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் ராணுவ நல சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரிமா சங்க அறக்கட்டளை சேர்மன் நீலகண்டன் தேசியக் கொடியேற்றினார்.



முன்னதாக, நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் சுரேஷ் பிரகாஷ் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர். நிகழ்ச்சியில் நேதாஜி நடைப்பயிற்சி நிர்வாகிகள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள்,



இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.





மேலும், ஓவியர் கனிமொழி என்ற மாணவி 78 சுதந்திர வீரர்களின் உருவப்படங்களை வரைந்து காட்சிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கத்தின் செயலாளர் சக்திவேல், பொருளாளர் சிவகுமார், நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...