உடுமலை அருகே சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தேசிய கொடியேற்றினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்கமாக, பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.



அதைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் மாணவர்களும் தேசிய கீதத்தை பாடினர்.





கொடியேற்றத்துக்குப் பின் பள்ளியின் நினைவுச் சின்னமான அமர் சக்ராவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் தீப்தி உபாத்யாய மலர் அஞ்சலி செலுத்தினர்.



பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் கண்கவர் நடன நிகழ்ச்சி நடத்தினர்.

விழாவின் அடுத்த கட்டமாக, 8, 9ம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் "இந்தியா 78" மற்றும் "உலக அரங்கில் இந்தியா" என்ற தலைப்புகளில் உரையாற்றினர். பள்ளியின் பாடல் குழு தேசபக்தி பாடல்களை இசைத்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். 9, 11ஆம் வகுப்பு மாணவர்கள் சுதந்திரத்தைப் பற்றிய உரை நாடகம் நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்தனர்.

7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தி மொழியில் கவிதை வாசித்து தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். ராணி என்பவர் தனது உரையில் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் விடுதலைப் போராட்டத்தையும் நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தலைமை ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மாபெரும் தலைவர்களின் தியாகம் மற்றும் தன்னலமற்ற முயற்சிகளை நினைவு கூர்ந்தார். மேலும், பொருளாதார வளர்ச்சி, அறிவியல், விவசாயம், மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவின் வேகமான வளர்ச்சியை அவர் வலியுறுத்தினார்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் 12 முக்கிய பண்புகளை புரிந்து கொண்டு உள்வாங்கி, முற்போக்கான தேசத்தை நோக்கி உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறு சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் 78வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...