டெங்கு தடுப்பு: மக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் மழைக்காலத்தில் டெங்கு பரவலைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கிராமசபை கூட்டத்தில் அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம், கிட்டாம்பாளையம் ஊராட்சி, வடுகம்பாளையம் மாகாளியம்மன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசினார்.

அவர் தனது உரையில், "சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டனர். மக்களுக்கான ஆட்சியாக, சுதந்திரமான ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு இதுபோன்ற கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன" என்றார்.

மேலும், மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், வீடுகளில் தண்ணீர் சேகரிக்கும் தொட்டிகள், போல்கள், குடங்கள் போன்றவற்றை முழுமையாக மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொசு மருந்து அடிக்கும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சூரிய மின் உற்பத்தி செய்து, சிறப்பு ஊராட்சிக்கான ISO தரச்சான்றிதழை இந்த ஊராட்சி பெற்றுள்ளதற்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...