ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வெற்றி கோப்பை போட்டிகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 700 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடத்தியது. இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக நடைபெற்ற இந்த போட்டிகள் "ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா வெற்றி கோப்பை" (RKMV TROPHY) என்ற பெயரில் நடத்தப்பட்டன.


விவேகானந்தா ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 700 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். பார்வையற்றோருக்கான கையுந்துப்பந்து, பார்வையற்றோருக்கான மட்டைப்பந்து, அமர்வு கையுந்துப்பந்து, காது கேளாதோருக்கான கபாடி, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஐவர் கால்பந்து, சக்கர நாற்காலி இறகுப்பந்து, சக்கர நாற்காலி மேசைப்பந்து மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான அமர்வு கிரிக்கெட் ஆகிய எட்டு விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.




காலை 9 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், கோவை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர், மூத்த பட்டய கணக்கறிஞர் திரு அழகிரிசுவாமி, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர், விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் துணை நிர்வாக இயக்குனர் சுவாமி புத்திதானந்தர் மற்றும் பல்கலைக்கழக விளையாட்டுத் துறையின் தலைவர் டாக்டர் ஆர் கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




போட்டிகளின் தொடக்கமாக தேசியக் கொடி, வித்யாலயக் கொடி மற்றும் பல்கலைக்கழகக் கொடி ஆகியவை ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. முதல் நாள் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.




அடுத்த நாளான 78வது சுதந்திர தினத்தன்று, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி அணிவகுப்பு செய்தனர். அதன் பின்னர், முந்தைய நாளில் நடைபெற்ற போட்டிகளின் இறுதிச் சுற்றுகள் நடத்தப்பட்டன.




வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.20,000 (சக்கர நாற்காலி இறகுப்பந்துக்கு ரூ.7,000), இரண்டாம் பரிசாக ரூ.18,000 (சக்கர நாற்காலி இறகுப்பந்துக்கு ரூ.6,000), மூன்றாம் பரிசாக ரூ.16,000 (சக்கர நாற்காலி இறகுப்பந்துக்கு ரூ.5,000) மற்றும் நான்காம் பரிசாக ரூ.14,000 (சக்கர நாற்காலி இறகுப்பந்துக்கு ரூ.4,000) வழங்கப்பட்டன. அனைத்து வெற்றியாளர்களுக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.




மாலை 4 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.




ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் 1930 ஆம் ஆண்டு ஒரே ஒரு மாணவருடன் தொடங்கப்பட்டு, இன்று 15 நிறுவனங்களைக் கொண்ட பெரிய கல்விச் சாலையாக வளர்ந்துள்ளது. சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளின் அடிப்படையில், மனிதனை மனிதனாக்கும் ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வியை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் கல்விப் பணிகளுடன், விளையாட்டுத் துறையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...