தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மாயம்..!

தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 7 மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு மாதிரி பள்ளி மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் கீழ், குண்டடம் மாதிரி பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் சுதந்திர தின விழா விடுமுறையை கொண்டாட குளிக்கச் சென்றனர். இவர்களில் டேவிட், அசப் சாமுவேல், ஸ்டீவ் டேனியல், கலாப், டெவின் ரோஜர், நித்தீஸ் குமார் மற்றும் ஜெரோமியா ஆகியோர் அடங்குவர்.



எதிர்பாராத விதமாக, 16 வயதான ஜெரோமியா (ராஜகோபாலின் மகன்) என்ற மாணவன் மட்டும் நீரில் மூழ்கி காணாமல் போனார். மற்ற 6 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தாராபுரம் அமராவதி ஆற்றுப் பாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...