கோவையில் வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் பெண் படுகாயம்

கோவை காந்திபுரம் பகுதியில் வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணை வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் படுகாயமடைந்தார். பாதிக்கப்பட்ட பெண் குன்னூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை காந்திபுரம் பகுதியில் வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணை வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்திபுரம் நூறு அடி சாலை 9வது வீதி, ராஜேந்திர பிரசாத் சாலையில் வசிப்பவர் சிந்து. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை, சிந்து தனது வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஐசக் பாபு என்பவரின் வளர்ப்பு நாய் திடீரென சிந்துவின் மீது பாய்ந்து கடித்துக் குதறியது.

இந்த தாக்குதலில் சிந்துவின் வலது கை, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மேலும் சிகிச்சைக்காக குன்னூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு தேவையான ஊசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த வளர்ப்பு நாய் இதற்கு முன்னர் 10-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாகவும், நாய்க்கு தடுப்பூசி கூட போடப்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், நாயின் உரிமையாளரான ஐசக் பாபுவிடம் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அவர் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்பு நாய்களை பொறுப்புடன் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் இச்சம்பவம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...