மடத்துக்குளம் அருகே வழித்தட பிரச்னை: திமுகவினர் வாக்குவாதம்; விவசாயி தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வழித்தட பிரச்னையால் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் வாக்குவாதம். விவசாயி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில் வீரக்குமார் என்பவருக்கு 3.30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திமுகவைச் சேர்ந்த கௌதம் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.

கௌதம் தனது நிலத்திற்கு செல்ல வீரக்குமாரின் இடத்தில் வழித்தடம் உள்ளதாக கூறி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். விசாரணைக்குப் பின், வருவாய் கோட்டாட்சியர் கௌதமுக்கு வழித்தடம் ஏற்படுத்தி தர மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் சர்வே துறைக்கு உத்தரவிட்டார்.

வீரக்குமார் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று கௌதமிற்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட திமுகவினர் மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் சர்வே துறையினருடன் வீரக்குமார் இடத்துக்கு வந்தனர். வீரகுமார் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது உறவினர்கள் ஐந்து நாள் அவகாசம் கேட்டனர். இதற்கு கௌதம் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.





சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி வீரகுமார் தரப்பில் உள்ள பெண்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வீரக்குமார் உறவினர் கனகராஜ் என்பவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செல்வராணி என்பவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்க முயன்றதால் பரபரப்பு அதிகரித்தது.



சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தற்சமயம் வீரக்குமார் தரப்பில் வழியாக செல்லும் வழித்தடம் எடுப்பதற்கு ஐந்து நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...