கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்: புறநோயாளிகள் பாதிப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பாதிக்கப்பட்டது.



கோவை: கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.



இதன் காரணமாக புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு மேற்கொண்டனர், இதனால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த கொடூர செயலுக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அழைப்பு விடுத்தது.



இந்த அழைப்பை ஏற்று கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை. வழக்கமாக தினமும் சுமார் 6,000 நபர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில், மருத்துவர்களின் பணி புறக்கணிப்பால் சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும், மருத்துவமனை உள்நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைக்கு வருவோருக்கும் மருத்துவர்கள் வழக்கம்போல் சிகிச்சை அளித்து வந்தனர்.



ஆனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...