பொள்ளாச்சியில் புற்றுநோய் சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம்

பொள்ளாச்சியில் மிராக்கிள் ஒருங்கிணைந்த சுகாதார மையம் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் இணைந்து புற்றுநோய் சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்து 40 மருத்துவர்கள் பங்கேற்றனர்.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ள மிராக்கிள் ஒருங்கிணைந்த சுகாதார மையம் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம் இணைந்து நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கம் ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெற்றது.



இந்தியா முழுவதிலிருந்து சுமார் 40 மருத்துவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்று, புற்றுநோய்க்கான புதிய மருத்துவ முறைகள் குறித்து விவாதித்தனர். உணவு கட்டுப்பாடு, பாரம்பரிய நவதானிய உணவின் முக்கியத்துவம், பழவகைகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.



மேலும், அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்கள், நிறமூட்டப்பட்ட உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் பற்றியும், அவற்றிற்கான தீர்வுமுறைகள் குறித்தும் விவாதித்தனர்.

மிராக்கில் மருத்துவ மையத்தின் நிறுவனர் முனைவர் மாணிக்கம் மகாலிங்கம் தலைமையில், புற்றுநோய் மருத்துவ நிபுணர்களான டாக்டர் பிரதீப், டாக்டர் அய்யப்பன், டாக்டர் சயைத்தாகிர், டாக்டர் ரமேஷ்கௌரங், டாக்டர் சரண்யன், டாக்டர் ஸ்ரீகுமார் ஆகியோர் உரையாற்றினர்.



பொள்ளாச்சி NIA கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதியான மிராக்கில் ஒருங்கிணைந்த சுகாதார மையம், உலகத்தரம் வாய்ந்த, பக்க விளைவுகள் அற்ற புற்றுநோய் சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் முதன்முறையாக ஆன்கோ தெர்மியா என்னும் புற்றுநோய் சிகிச்சை இம்மையத்தில் வழங்கப்படுகிறது. கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவர்கள் இந்த சிகிச்சைகள் குறித்து விவாதித்து பயனடைந்தனர்.

இக்கருத்தரங்கில் NIA கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் C. இராமசாமி, NIA கல்வி நிறுவனங்களின் முதன்மை மனிதவள அலுவலர் முனைவர் S.V. சுப்பிரமணியன், மிராக்கில் முதுநிலை மருத்துவ அலுவலர் டாக்டர் R. தங்கவேலு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை NIA கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் S. நாகராஜன், மிராக்கில் மேலாளர் G. ரமேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...