போலீஸ் விசாரணைக்கு பயந்து ஓடிய இளைஞர் கோவை வாளாங்குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

கோவை பந்தய சாலையில் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று இளைஞர்களில் ஒருவர் தப்பி ஓடி வாளாங்குளத்தில் குதித்து உயிரிழந்தார். மற்ற இருவரிடம் விசாரணை தொடர்கிறது.



கோவை: கோவை பந்தய சாலை பகுதியில் நடந்து சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து ஓடி வாளாங்குளத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒண்டிபுதூரை சேர்ந்த விஷ்வா மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் கோவை பந்தய சாலை பகுதியில் நடந்து சென்றனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் இராமநாதபுரம் போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்து வந்தனர். விசாரணையின் போது விஷ்வாவின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு பயந்த விஷ்வா அங்கிருந்து தப்பி ஓடி, கோவை வாளாங்குளத்தில் குதித்து தப்ப முயன்றார். ஆனால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பந்தய சாலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.



போலீசார் விஷ்வாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, உயிரிழந்த விஷ்வாவின் நண்பர்கள் இருவரிடம் இராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையில், விஷ்வாவின் நண்பர்கள் இருவரும் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...