பொள்ளாச்சியில் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பலர் கலந்து கொண்டனர்.


கோவை: பொள்ளாச்சியில் நகர திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் 91வது பிறந்த நாள் விழா பொள்ளாச்சி நகர திமுக சார்பில் தேர்நிலைத் திடல் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாநில தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.க. முத்து, நகர துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...