பில்லூர்-III குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக கூடுதல் செயலாளர்

கோவையில் ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பில்லூர்-III குடிநீர் திட்டப்பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக கூடுதல் செயலாளர் த.தாரா நேரில் ஆய்வு செய்தார். திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில், குடிநீர் தேவைக்காக ரூ.780.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பில்லூர்-III குடிநீர் திட்டப்பணிகளை, மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்) விவேகானந்தன் இ.ஆ.ப, அவர்கள், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக கூடுதல் செயலாளர் (அம்ரூத்) த.தாரா இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளின் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை நிறைவேற்று வகையில் ரூ.780.00 கோடி மதிப்பீட்டில் பில்லூர் -3 குடிநீர் திட்டப்பணி செயல்படுத்தப்பட்டுள்ளது.



இத்திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர்-III குடிநீர் திட்டம் மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு அதில் இயல்பு நீர் (RAW Water) சேகரிப்பு நிலையம், சுத்திகரிப்பு நிலையம், சுத்த நீர் கொண்டு வரும் குழாய் (மருதூர் முதல் பன்னிமடை வரை) கிளை பிரதானகுழாய் பன்னிமடை முதல் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 6 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் வரை சென்றடைகிறது.



மேலும், மூன்று பகுதிகளில் முதல் பகுதியாக முருகையன் பரிசல் துறை பகுதியில் அமைந்துள்ள இயல்பு நீர் (RAW Water) சேகரிப்பு நிலைய நீர் உந்து நிலையத்தில் மின் மோட்டார்கள் மூலம் இயக்கப்பட்டு, அப்பகுதியில் வால்வுகள் (Air Valves) அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.





அதனைத் தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக கூடுதல் செயலாளர் (அம்ரூத்) அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம்-III, தலைமை நீரேற்றும் நிலையத்தினையும், மருதூர் ஊராட்சி, தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் பில்லூர் அபிவிருத்தி திட்டம்- III, 178 MLD குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் மற்றும்



பில்லூர் அணையின் பில்லூர்-3வது குடிநீர் திட்டம் கட்டன்மலை பகுதியின் சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.





தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட சேரன் நகர் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்கன அடிப்படையில் இணையத்தின் வாயிலாக சுமார் 400 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதையும் மற்றும்





வடக்கு மண்டலம் வார்டு எண்.21க்குட்பட்ட கணபதி. ராமகிருஷ்ணாபுரம் பகுதியில், மாநகராட்சியின் 24X7 மணி நேர குடிநீர் விநியோக பிரதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அவ்வலாகத்தில் செயல்படும் குடிநீர் தர ஆய்வகத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, பொது மேலாளர் (TUFIDCO) முருகன், தலைமைப் பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) செல்லமுத்து, மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மாநகர துணை தலைமைப்பொறியாளர் முருகேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் பட்டன், உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, எழில், சவிதா, மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ, உதவி பொறியாளர்கள் கல்யாணசுந்தரம், சக்திவேல், நாசர், சபரிராஜ், சத்தியமூர்த்தி, சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...