அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு: போலீஸார் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் நடந்த கூட்டத்தில் அரசுக்கு எதிராக பேசியதாகக் கூறப்படும் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட்8-ஆம் தேதி, கோவை கெம்பட்டி காலனி பாரதியார் திடலில் இந்து மக்கள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி உரையாற்றினார். அப்போது அவர் கலகம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அச்சம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் விதமாகவும், அரசுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, பெரியக்கடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், ஓம்கார் பாலாஜி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், உள்ளூர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விவரங்கள் வெளியாகவுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...