பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு கோதவாடி பிரிவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் வால்பாறைக்கு சுற்றுலா சென்ற இரு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் டெல்லி மாநிலம் ஆக்ராவை சேர்ந்த அக்சத் ஹர்சானா (வயது 20), அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுபித் (வயது 21) ஆகிய இருவரும் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு கோதவாடி பிரிவு அருகே அதிவேகமாக வந்த கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார் கல்லூரி மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த துயரமான சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...