ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் சீர்காழி சிதம்பரம் பக்தி பாடல் பாடி வழிபாடு

பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் பிரபல பாடகர் சீர்காழி சிதம்பரம் தனது திருமண நாளன்று குடும்பத்துடன் சிறப்பு தரிசனம் செய்து, பக்தி பாடல் பாடி வழிபட்டார். பக்தர்கள் இதனை மெய்மறந்து ரசித்தனர்.



Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நேற்று இரவு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. பிரபல பாடகர் சீர்காழி சிதம்பரம் தனது திருமண நாளை முன்னிட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சிறப்பு தரிசனம் செய்தார்.

தரிசனத்தின் போது, சீர்காழி சிதம்பரம் மாசாணி அம்மனை வழிபடும் விதமாக மனம் உருகி பக்தி பாடல் ஒன்றை இசைத்தார். கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் அவரது இனிமையான குரலில் பாடிய பாடலை மெய்மறந்து ரசித்தனர்.



இந்த சிறப்பு நிகழ்விற்கு முன்னதாக, ஆனைமலை மாசாணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், கோயில் துணை ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் உறுப்பினர் மஞ்சுளாதேவி ஆகியோர் சீர்காழி சிதம்பரத்தை வரவேற்று பாராட்டினர்.

ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்களை ஈர்க்கும் புகழ்பெற்ற கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு தரிசனம் மற்றும் பக்தி பாடல் நிகழ்வு கோயிலின் புகழை மேலும் உயர்த்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...