உடுமலையில் திமுக அலுவலக திறப்பு விழா: சாலை மத்தியில் பந்தல் அமைத்ததால் அவசர ஊர்திகள் சிக்கல்

உடுமலையில் திமுக எம்பி அலுவலக திறப்பு விழாவிற்காக சாலையின் நடுவே பந்தல் அமைக்கப்பட்டதால், அவசர ஊர்திகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இச்செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி. வீதியில் அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், இன்று வ.உ.சி. வீதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி ஈஸ்வரசாமியின் அலுவலகத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, திமுகவினர் வ.உ.சி. வீதியின் நடுவே பந்தல் அமைத்தனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் அவசர ஊர்திகள் மற்றும் பிற வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின.



அவசர ஊர்திகள் மற்றும் வாகன ஓட்டிகள் சுமார் 500 மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்செயல் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் நடுவே பந்தல் அமைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் பலரும், அரசியல் கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தும் போது பொது இடங்களையும், சாலைகளையும் ஆக்கிரமிப்பது தவறு என்றும், இது போன்ற செயல்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...