உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். 94,201 ஏக்கர் பயன்பெறும். 120 நாட்களுக்கு 8000 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.

உடுமலை திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் பாசனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், Dharapuram மற்றும் காங்கேயம் ஆகிய வட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தம் 94,201 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைகின்றன.

திறக்கப்படும் தண்ணீர் இன்று முதல் டிசம்பர் 16 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு 4 சுற்றுகளில் உரிய இடைவெளி விட்டு 8000 மில்லியன் கன அடி திறக்கப்படுகிறது. தற்சமயம் திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடியில் 57.21 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 889 கன அடியாக உள்ளது. தற்போது பிரதான கால்வாயில் 250 கன அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, தலைமை பொறியாளர் முருகேசன், திருமூர்த்தி கோட்டம் செயற்பொறியாளர் மகேந்திரன், திருமூர்த்தி அணை உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன், உடுமலை கால்வாய் கோட்டம் உதவி செயற்பொறியாளர் பாபு என்கிற சபரீஷ்வரன், திருமூர்த்தி அணை உதவி பொறியாளர் மாரிமுத்து ஆகியோருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...