ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணி துவக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் துவங்கின. முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜிலோப்பிநாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள கரட்டுப்பெருமாள் கோவில் சீரமைப்பு பணிகள் இன்று துவங்கின. இப்பணிகளை மடத்துக்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவருமான ஜெயராமகிருஷ்ணன் பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பாபு, உடுமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செழியன், உடுமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராம், ரெட்டியபாளையம் ஊர்த் தலைவர் மோகன், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் ஊர்த் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜிலோப்பிநாயக்கன் பாளையம் திமுக கிளைச் செயலாளர் ஜெயக்குமார், கிளை துணைச் செயலாளர் ஆனந்த் ஆகியோரும் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகளான மயில்சாமி, ரவி, ராம்ராஜ், ராஜ் (எ) கருப்புசாமி, தங்கவேல், லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இக்கோவில் சீரமைப்பு பணிகள் மூலம் பழமையான இக்கோவிலின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு சிறந்த வழிபாட்டு சூழல் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...