கோவை கெம்பட்டி காலனியில் புதிய வீடற்றோர் காப்பகத்தின் இரண்டாம் தளத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை கெம்பட்டி காலனியில் BOSCH நிறுவனத்தின் CSR நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய வீடற்றோர் காப்பகத்தின் இரண்டாம் தளத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில், மாநகராட்சி இடத்தில் BOSCH என்கிற தனியார் நிறுவனத்தின் முழு பங்களிப்புடன் (CSR FUND) ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தின் இரண்டாம் தளத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் Kranthi Kumar Pati இன்று (ஆகஸ்ட் 19) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத்குமார் ஜெயின், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன், உதவி ஆணையர் செந்தில்குமரன், மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் (பொ) குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



BOSCH நிறுவன அலுவலர் நவேத்நாராயணன் மற்றும் Helping Hearts தொண்டு நிறுவனத்தின் கணேஷ் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த புதிய வீடற்றோர் காப்பகம் நகர்ப்புற ஏழைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த திட்டம் BOSCH நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு இணைந்து செயல்படும் போது சமூகத்திற்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த வீடற்றோர் காப்பகம் திகழ்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...