கோவை: நில மோசடி குறித்து அதிமுக எம்.எல்.ஏ மீது குடும்ப வாரிசுதாரர்கள் புகார்

கோவையில், சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ மீது 30க்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுதாரர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நில மோசடி புகார் அளித்துள்ளனர்.



Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்து தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, கோவை மாவட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், அவரது உறவினர் மற்றும் ஒரு தனியார் நபர் ஆகியோர் இணைந்து இந்த மோசடியை செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

புகார் மனுவில், நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும், குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து சொத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.



வாரிசுதாரர்களின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காளிக்கோனாரின் வாரிசுதாரர்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தை, உயிருடன் இல்லாதவர்களை உயிருடன் இருப்பதாக காண்பித்து மோசடி செய்து அபகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது, "ஸ்ரீ சக்தி கார்டன்" என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி வீட்டு மனைகளை விற்பனை செய்து வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மோசடியாக வீட்டுமனைகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், அவருடைய உறவினர் மணிகண்டன் மற்றும் ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் இணைந்து தங்களுடைய சொத்துக்களை திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

வாரிசுதாரர்கள், தங்களை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், மேற்கூறிய மூவரும்தான் பொறுப்பு என்றும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...