கோவை மாநகராட்சியில் மேயர் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (20.08.2024) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக மேயரிடம் சமர்ப்பிக்கலாம்.


Coimbatore: கோவை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, நாளை (20.08.2024) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை வகிப்பார். கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக மேயரிடம் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின் விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில் வரி, சொத்து வரி, காலியிட வரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கலாம்.

இந்தக் கோரிக்கைகளின் மீது மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...