உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 300 விவசாயிகள் கைது

உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக கூறி, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் தாமோதரன், திமுகவினர் துணையோடு தனக்கு வேண்டிய புரோக்கர்களை வைத்து பத்திரப்பதிவுக்கு வரும் விவசாயிகளையும் வீட்டு மனை பதிவுக்கு வரும் பொது மக்களையும் மிரட்டி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பத்திரபதிவுகளில் முறைகேடாகவும் ஆள்மாறாட்டம் செய்தும் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



இந்த முறைகேடுகளுக்கு எதிராக விவசாயிகளும் பொதுமக்களும் பல கட்ட போராட்டங்களை நடத்தியும், மாவட்ட பதிவாளர், மண்டல பதிவாளர் மற்றும் தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சார்பதிவாளர் தாமோதரன் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள், "தாமோதரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...