அருந்ததியர் இளைஞர் கொலை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கோரி மனு

பொள்ளாச்சியில் கொலை செய்யப்பட்ட அருந்ததியர் இளைஞர் வழக்கை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யக் கோரி ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



Coimbatore: பொள்ளாச்சி பகுதியில் கொலை செய்யப்பட்ட அருந்ததியர் சமூக இளைஞர் அரவிந்த் வழக்கை பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (SC/ST) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரியும், இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இதர குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞர் அரவிந்த் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தாங்கள் செய்ததாக பைசல், விமல் என இருவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஆனால், காவல்துறையினர் இந்த வழக்கில் பல்வேறு உண்மைகளை மறைத்தும் திரித்தும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



கொலை செய்யப்பட்டவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று தெரிந்தும், இந்த வழக்கை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யவில்லை என்றும், கொலை வழக்கில் இதர குற்றவாளிகளான பிரவீன்குமார், தமிழ்செல்வன், குருபிரசாத் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கவில்லை என்றும் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கொலை நடந்த இடம் குறித்தும் காவல்துறை தவறான தகவலை பதிவு செய்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்டவரின் மனைவி ஹரிபுவனேஸ்வரியிடம் நிர்பந்தமாக கையொப்பம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்றும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் ஜனநாயக உரிமைகளுக்கான கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...