வால்பாறை ஐயர்பாடி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

வால்பாறை ஐயர்பாடி பகுதியில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலானது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைகள் அதிகளவில் நுழைந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஐயர்பாடி பகுதியில் சாலை ஓரத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சிறுத்தையைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், தாங்களாகவே சிறுத்தையை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...