சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் பகுதிகளில் நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சோமனூர், குப்பேபாளையம், கோமங்கலம்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (ஆகஸ்ட் 20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, குப்பேபாளையம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலூர் (ஒருபகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்தூர், வடுகபாளையம், மொண்டிகாளிபுதூர், ரங்கப்பகவுண்டன்புதூர், மூணுகட்டியூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சோமனூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமாளபுரம், ராமாச்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன்பாளையம், கணியூர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கோமங்கலம்புதூர் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் கோவை, கடைமடு, கோமங்கலபுதூர், லட்சுமிபுரம், குவுலநாயக்கன்பட்டி, வத்தநல்லூர், சத்திபாளையம், கள்ளர்பட்டிசுங்கம், கொல்லர்பட்டி, திப்பம்பட்டி, நல்லம்பள்ளி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை நாளை (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீடிக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் முன்னதாகவே முடிவடைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...