ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனம் மீதான புகார் பொய்யானது - நிர்வாக இயக்குனர் தியாகராஜன் விளக்கம்

தாராபுரத்தில் ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனம் மீது கண்வலி விதை கொள்முதலில் மோசடி புகார். நிர்வாக இயக்குனர் தியாகராஜன் புகாரை மறுத்து, விவசாயிகளுக்கு உரிய பணம் வழங்கப்படுவதாக உறுதியளித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ரெட் லீப் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன், தமது நிறுவனம் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்களை முற்றிலும் மறுத்துள்ளார்.



திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளிடமிருந்து செங்காந்தள் மலர் எனப்படும் கண்வலி விதைகளை கிலோவுக்கு ரூ.3200 வீதம் வாங்கி வருவதாகவும், அதற்கான பணத்தை சுழற்சி முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருவதாகவும் தியாகராஜன் தெரிவித்தார்.

கள்ளிமந்தத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் என்ற இருவர், ரெட் லீப் நிறுவனம் தங்களிடமிருந்து கண்வலி விதைகளை வாங்கி முழு பணத்தையும் வழங்கவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்த புகார் முற்றிலும் பொய்யானது என தியாகராஜன் மறுத்துள்ளார்.

"சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் ஆகியோரிடமிருந்து எங்கள் நிறுவனம் கண்வலி விதைகளை கொள்முதல் செய்யவில்லை. அவர்களுக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் பண பரிவர்த்தனையும் இல்லை," என்று தியாகராஜன் விளக்கினார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 1,786 கிலோ கண்வலி விதைகள் கொள்முதல் குறித்தும், பாதி பணம் மட்டுமே வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் தியாகராஜன் மறுத்தார். மேலும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், வங்கிக் கணக்குகளை முடக்குவதாகவும் உள்ள குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.

"எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்க முயலும் சுரேஷ்குமார் மற்றும் ராஜரத்தினம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்," என்று தியாகராஜன் எச்சரித்தார்.

ரெட் லீப் நிறுவனத்திற்கு கண்வலி விதைகளை விற்பனை செய்த விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றும், அனைவருக்கும் சுழற்சி முறையில் வங்கி மூலம் பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தியாகராஜன் உறுதியளித்தார்.

மூலனூரில் நடைபெற்ற ரெட் லீப் நிறுவன ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் சந்திப்பில், விவசாயி சிவகுமார் பேசுகையில், "கடந்த 30 வருடங்களாக கண்வலி விவசாயம் செய்து வருகிறேன். 15 வருடங்களாக ரெட் லீப் நிறுவனத்திற்கு விதைகளை விற்று பணம் பெற்று வருகிறேன். அவர்கள் எந்த விவசாயியையும் ஏமாற்றவில்லை," என்று தெரிவித்தார்.

"சுரேஷ் மற்றும் ராஜரத்தினம் போன்றோர் வேறு சில நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தங்கள் சுயலாபத்திற்காக போலி ஆவணங்கள் தயாரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். விவசாயிகள் யாரும் இதை நம்ப வேண்டாம்," என்று சிவகுமார் எச்சரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...