திருமூர்த்தி அணை நிரம்புவதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணை வேகமாக நிரம்பி வருவதால், பாலாற்றின் கரையோரம் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், அணைக்கு அருகிலுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குறுமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.



அணையின் மொத்த கொள்ளளவு 60 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 57.53 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் எந்நேரமும் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வல்ல குண்டாபுரம், வலையபாளையம், ஜிலேபி நாயக்கன்பாளையம், அர்த்தனாரி பாளையம், தேவனூர்புதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...